 வாசவி கல்லூரியில் மகளிர் தின விழா

ஈரோடு, மார்ச் 13:   ஈரோடு  வாசவி கல்லூரி சுயநிதி பிரிவு மகளிர் அமைப்பின் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயலாளர் ஆதிகேசவன் தலைமை தாங்கினார். டீன் அனந்தபத்மநாபன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு மாருதி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை டாக்டர். நிர்மலா சதாசிவம், திண்டல் வேளாளர் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர். சாமுண்டேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இளங்கலை இறுதியாண்டு மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கும், கல்லூரியில் இளங்கலை, முதுகலை பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கும், அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கும் ஈரோடு வித்யா சங்கத்தின் துணைத் தலைவர் பாண்டுரங்கன் பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரியின் மகளிர் அமைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories:

>