×

ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்

ராஜபாளையம், மார்ச் 13:   ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று பிரசாரத்தை துவக்கினார். ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை அவர் நேற்று தொடக்கினார். பசும்பொன் முத்துராமலிங்கதேவர், தியாகி அரங்கசாமி ராஜா, பி.ஏ.சக்கராஜா, பி.எஸ்.குமாரசாமி, பி.ஏ.சி ராமசாமி ராஜா, மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்பட்ட பல்வேறு தலைவர்கள் சிலைக்கும், பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா திருவுருவப் படத்திற்கும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது அவர் பேசுகையில், `` ஏன் சொந்த தொகுதியில் நிற்கவில்லை என்று பலர் கேட்கிறார்கள். எனது சொந்தத் தொகுதி சிவகாசி என்றாலும், எனது சொந்தக்கார தொகுதி ராஜபாளையம். எனவே, போட்டியிடுகிறேன்’’ என்றார். இப்பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Minister ,Rajendrapalaji ,Rajapalayam constituency ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...