×

தேவதானப்பட்டி பகுதியில் நீர், நில வள திட்டம் ஆய்வு

தேவதானப்பட்டி, மார்ச் 13:பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வராகநதி உபவடி நிலப்பகுதியில் நீர்வள நிலவள திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் தேவதானப்பட்டி அருகேயுள்ள சில்வார்பட்டி, ஜெயமங்கலத்தில் வாழை சாகுபடியில் துல்லிய பண்ணைய செயல்விளக்க திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திடல்களின் செயல்பாடுகளை திட்ட இயக்குனர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். இத்திட்டத்தால் பயனடைந்த சில்வார்பட்டி விவசாயிகள், துரைப்பாண்டி, கணேசன் ஆகியோர் 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசன அமைப்பு மற்றும் வாழை கன்றுகளையும் வழங்கியதால் பொருளாதாரத்தில் மேம்பட்டதாக கூறினர். உடன் திட்ட பொறுப்பு விஞ்ஞானி கவிதா,  இயற்கை வள மேலாண்மை துறைதலைவர் கண்ணன்,  உதவி ஆசிரியர் உமாமகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.

Tags : Devadanapatti Area ,
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...