மாம்பழக்கூழ் மூலப்பொருள் 2 ஆண்டுகள் கெடாது பெரியகுளம் தோட்ட கல்லூரி முதல்வர் தகவல்

பெரியகுளம், மார்ச் 13: பெரியகுளம் அருகே கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட தோட்டக்கலைக்கல்லூரி- ஆராய்ச்சிநிலையத்தில் தோட்டக்கலை தொழில் முனைவோர் மையம் உள்ளது. இந்த மையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மா, முருங்கை உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களிலிருந்து விதவிதமான பொருட்கள் தயார் செய்து விற்பனை செய்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்நிலையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் சார்பில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக பல்வேறு வகையான இயந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது என கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மாம்பழம் நல்ல விலை போகாத காலத்தில் அதனை மாம்பழக்கூழ் மூலப்பொருள் தயார் செய்து அதனை டின்களில் அடைத்து தருவதற்கு கிலோ ஒன்றிற்கு ரூ.5 கட்டணமாகும். இதன்மூலம் மாம்பழக்கூழ் மூலப்பொருள் 2 வருடங்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும். அதேபோல் முருங்கை இலை, இதர காய்கறி,  பழங்களை சூரியஒளியில் உலர வைக்கும் இயந்திரம் நாள் ஒன்றிற்கு வாடகை ரூ.500, உலர்ந்த பழம் மற்றும் காய்கறிகளை பொடியாக்கும் இயந்திரம் ஒரு மணிநேரத்திற்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இதுபோன்று நல்ல விலை போகாத காலங்களில் இந்த இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி கொண்டு பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு பெரியகுளம் தோட்டக்லைக்கல்லூரியின்  தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தினை 93619 21828 என்ற எண்ணில் அணுகி விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்’ என்றார்.

Related Stories:

>