×

நிலக்கோட்டையில் பிஸ்கட் வியாபாரியிடம் ரூ.86 ஆயிரம் பறிமுதல்

வத்தலக்குண்டு, மார்ச் 13: நிலக்கோட்டை ஐயப்பன் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரேவதி தலைமையிலான குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நிலக்கோட்டையில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற மினி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் வத்தலக்குண்டு பள்ளிவாசல் தெருவை பிஸ்கட் வியாபாரி அசன் முகமது என்பவர் ரூ. 86 ஆயிரத்து 445ஐ எந்த ஆவணமின்றி கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் ஒப்படைத்தனர். உடன் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சுப்பையா, தேர்தல் துணை தாசில்தார் தங்கேஸ்வரி, தலைமையிடத்து துணை தாசில்தார் பானுலட்சுமி, மண்டல துணை தாசில்தார்கள் பாபு, சரவணகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags : Nilakottai ,
× RELATED தேசிய ரோல்பால் போட்டிக்கு தமிழக வீரர்களை வாழ்த்தி அனுப்பும் நிகழ்ச்சி