×

ஒட்டன்சத்திரத்தில் திமுக ஆலோசனை கூட்டம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 13: ஒட்டன்சத்திரத்தில் நகர திமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி, இளைஞரணி, மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் தர்மராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் முருகேசன், நகர ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்பாபு, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Ottanchattaram ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி