மகளிர் தின விழா

ஒட்டன்சத்திரம், மார்ச் 13: ஒட்டன்சத்திரத்தில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. அரசு மருத்துவர் கார்த்திகா தலைமை வகித்து உலக மகளிர் தினத்தின் மாண்புகள் குறித்தும், பெண் விடுதலை குறித்தும் எடுத்துரைத்தார். சுனைதா பேகம் பெண்களுக்கான கல்வி, சட்டம், உரிமைகள் குறித்து கருத்துரையாற்றினார். இதில் செவிலியர்கள் மாலா, வித்யா, உமா, கவிதா, மேனகா, காளீஸ்வரி, சினேகா, வின்மதி, காவியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>