நாட்டு வெடி தயாரிப்பு குடோன் வெடித்து சிதறியது தாசில்தார் விசாரணை

கடலூர், மார்ச் 13: கடலூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கிடங்கில் ஏற்பட்ட திடீர் விபத்தை தொடர்ந்து தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். கடலூர் அருகே உள்ள ரெட்டிச்சாவடி காவல் சரகத்திற்கு உட்பட்ட நல்லப்பரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் சீதாராமன். இவர் அதே பகுதியில் ஊருக்கு அருகாமையில் நாட்டு வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அப்பகுதியில் கிடங்கு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்த கிடங்கில் இருந்த வெடிகள் நேற்று முன்தினம் இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஊருக்கு சற்று தள்ளி தூரத்தில் கிடங்கு இருந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்நிலையில் பயங்கர வெடிச் சத்தத்தைக் கேட்ட ஊர் மக்கள் உடனடியாக அப்பகுதிக்கு சென்று தீயை அணைத்தனர் .மேலும் இது தொடர்பாக தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடலூர் தாசில்தார் பலராமன், சம்பந்தப்பட்ட நாட்டு வெடி தயாரிப்பு உரிமையாளர் சீத்தாராமனிடம்  விசாரணை நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் நாட்டு வெடி விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்து காரணமாக கிடங்கு சேதம் மற்றும் வெடி பொருட்கள் சேதம் ரூ. ஒரு லட்சம் இருக்குமென கூறப்படுகிறது.

Related Stories:

More
>