சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர்: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. இதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. இதில் முதல் நாளான நேற்று அம்பத்தூரில் 2 பேரும், ஆவடி மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒருவர் என 4 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இதேபோல், திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு கூட்டம் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்த்து தேர்தல் நடத்தும் அலுவலர் மதுசூதனன் கோட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராக இருந்தனர். இதற்காக போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், 100 மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த அடையாள தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் மாலை வரை ஒருவர் கூட வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>