×

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அமமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. அமமுக சார்பில் 2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், தேமுதிகவுடன் கூட்டணி குறித்து கடந்த 3 நாட்களாக அமமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பதில் இழுபறி ஏற்பட்டு வந்ததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், 130 தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிட உள்ள 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: கும்மிடிப்பூண்டி - ராம்குமார், திருத்தணி - நடராஜன், திருவள்ளூர் - குரு, ஆவடி - திருவேற்காடு பா.சீனிவாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Temujin ,
× RELATED தேமுதிக தலைமைக்கழக பேச்சாளர் விபத்தில் பலி