×

விஜய் பேசும் போது நாகரிகத்துடன் பேச வேண்டும்; நிதானத்துடன் பேச வேண்டும்: சிவசங்கர் பேட்டி

சென்னை: விஜய் பேசும் போது நாகரிகத்துடன் பேச வேண்டும்; நிதானத்துடன் பேச வேண்டும் என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கரூர் இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் விஜய் கரூர் சென்றுள்ளார். கரூர் துயரம் நடந்த பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விஜய் மகிழ்ச்சியாக இருந்தார். கரூர் சம்பவம் நடந்து 285 நாட்கள் கழித்து விஜய் கரூர் சென்றிருக்கிறார். கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து, அங்கு இடைத்தேர்தல் வரும்வரை காத்திருந்துள்ளார். கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வைத்துக் கொண்டு ஊழல் பற்றி பேசுகிறார் விஜய்; ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் சிக்கியிருப்பவர் கரூர் விஜயபாஸ்கர்.

கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்து, அங்கு இடைத்தேர்தல் வரும்வரை காத்திருந்துள்ளார். கரூர் பலி நினைவு மண்பத்தில் விஜயின் முதுகே நினைவுச் சின்னமாக வைக்கப்பட வேண்டும். இன்று விஜய் கரூர் கூட்டத்துக்கு செய்த ஏற்பாட்டை அன்றே செய்திருந்தால் அசம்பாவிதம் நடந்திருக்காது. முதலமைச்சர் என்பதை மறந்து காவல்துறையையே குற்றம்சாட்டுகிறார். எந்த கட்சி தலைவரும் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என கூறியவர் மு.க.ஸ்டாலின். தாங்கள் செய்த தவறை மறைத்துவிட்டு முதலமைச்சர் விஜய் குற்றம்சாட்டுகிறார். பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினீர்கள் ஆனால் மனதில் வலி இருப்பதாக கூறுகிறீர்கள்.

தவெக அரசின் வழக்கறிஞர் நியமனம் சந்தி சிரிக்கிறது. ஊழற்ற ஆட்சிக்கு அரசு வழக்கறிஞர் நியமனமே போதும். மின்சாரம் பிரச்சனை தொடர்பாக இன்று வரை போராட்டம் தொடர்கிறது. பேச வேண்டிய இடங்களில் முதலமைச்சர் விஜய் பேசுவதில்லை ஆனால் பொதுக்கூட்ட மேடைகளில் வீர வசனம் பேசுகிறார். விஜய் பேசும் போது நாகரிகத்துடன் பேச வேண்டும்; நிதானத்துடன் பேச வேண்டும். 285 நாள் கழித்து கரூர் சென்றுள்ளார் விஜய்; இத்தனை நாளும் மன வலியோடுதான் இருந்தாரா விஜய்? முதல்வர் விஜய்க்கு விடியலே பிடிக்காது என்பதால் மகளிர் விடியல் பயணத் திட்டப் பெயர் மாற்றம் என்று கூறினார்.

Tags : Vijay ,Sivasankar ,Chennai ,Former Minister ,Chief Minister ,Vijay Karur ,Karur ,
× RELATED கரூரில் 31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் விஜய்