×

விளாத்திகுளம் தொகுதி திமுக வேட்பாளராக மார்க்கண்டேயன் அறிவிப்பு

விளாத்திகுளம், மார்ச் 13: விளாத்திகுளம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஜீ.வி மார்க்கண்டேயன் (45) அறிவிக்கப்பட்டுள்ளார். மார்க்கண்டேயனின் தந்தை பெயர் வரதராஜன். தாய் ராஜலட்சுமி. பிஏ பிஎல் படித்துள்ள ஜீ.வி. மார்க்கண்டேயன், அம்பாள் கோசாலை மற்றும் இயற்கை விவசாயம் நடத்தி வருகிறார். மனைவி ரெபேக்கா அனிட்டா. பி.ஏ.பி.எல் படித்துள்ளார். அக்சய், நிரஞ்சன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 2001-2011 வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் புதூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக இருந்துள்ளார். 2011-2016ல் அதிமுக சார்பில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 2019ம் ஆண்டு நடந்த விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு 27 ஆயிரத்து 456 வாக்குகள் பெற்றார். தற்போது அதே தொகுதியில் திமுக வேட்பாளராக களம் காணுகிறார்.

Tags : Markandeyan ,DMK ,Vilathikulam ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...