×

அரூர் தொகுதியில் முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் இல்லை

அரூர், மார்ச் 13: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான நேற்று வேட்பு மனு தாக்கல் துவங்கியது. இன்றும், நாளையும்(14ம் தேதி) விடுமுறை தினமாகும். நாளை மறுநாள்(15ம் தேதி) முதல் வரும் 19ம் தேதி வரை, தினசரி காலை 11 மணி முதல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை அனைத்து கட்சியினரும் முடுக்கி விட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில், அரூர்(தனி) தொகுதி, திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக மற்றும் அமமுக, நாம் தமிழர் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மனு தாக்கல் செய்ய வசதியாக, அரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முத்தையன், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் அசோக்குமார், அரூர் தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் தயார் நிலையில் இருந்தனர். இதேபோல், டிஎஸ்பி தமிழ்மணி தலைமையில்  இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் உள்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், முதல் நாளான நேற்று யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை. இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Arur ,
× RELATED டூவீலர்கள் மோதி தொழிலாளி பலி