×

தேர்தல் பயிற்சிக்கு செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

நாமக்கல், மார்ச்13: தேர்தல் பயிற்சிக்கு செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என, முதுகலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:
 தற்போது தமிழகத்தில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் அறிவித்தார். உயர்கல்வி படிக்க செல்லும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், பொதுத்தேர்வு உறுதியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள், பொதுத்தேர்வுக்கு மாணவர்களை ஆயத்தம் செய்யும் வகையில், பாடங்களை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல், ஏப்ரல் 6ம்தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு, வரும் 14ம்தேதி நாமக்கல் மாவட்டத்தில் முதல் தேர்தல் பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
பள்ளிகள் திங்கள் முதல் சனி வரை 6 நாட்களும் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, 6 நாட்கள் பள்ளி பணி, 7வது நாளில் தேர்தல் பயிற்சி வகுப்பு என, வாரத்தின் 7 நாட்களும் பணி நாளாக உள்ளது. எனவே, இனி வரும் சனிக்கிழமைகளில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். மேலும், சனிக்கிழமைகளில் விருப்பமுள்ள முதுகலை ஆசிரியர்கள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Tags : Saturday Holiday Teachers Association ,
× RELATED சந்தைக்குள் புகுந்து மின் ஒயர்கள் திருட்டு