×

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

பரமத்திவேலூர், மார்ச் 13: பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதியில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மெகராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் பரமத்திவேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பழைய பைபாஸ் கல்லூரி சாலையில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிமகள் வழியாக சென்று பேருந்து நிலையம் அருகே நிறைவடைந்தது. முன்னதாக கலெக்டர் மெகராஜ் தலைமையில் மாணவ, மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேரணியின் போது அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தி, கோஷம் எழுப்பிச் சென்றனர். இதில் பரமத்திவேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி, தாசில்தார் சுந்தரவல்லி, டிஎஸ்பி ராஜா ரணவீரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Student Awareness Rally ,
× RELATED மலை கிராமங்களில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி