×

கடையநல்லூரில் மீண்டும் களமிறங்கும் முகம்மது அபுபக்கருக்கு உற்சாக வரவேற்பு

கடையநல்லூர், மார்ச் 13: கடையநல்லூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முகம்மது அபுபக்கருக்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக கூட்டணியில் கடையநல்லூர் தொகுதி மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டு தற்போதைய எம்எல்ஏ முகம்மது அபுபக்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து கடையநல்லூர் வந்த அவருக்கு கடையநல்லூர் நகர திமுக செயலாளர் சேகனா, ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், செயலாளர் இக்பால், மாநில அமைப்பு செயலாளர் அப்துல் மஜீத், நகர தலைவர் செய்யது மசூது, அக்பர்அலி, ஹபிபுல்லா, ரகுமத்துல்லா, கடாபி, கமால்,  டாக்டர் நவாஸ்கான், திமுக பொறியாளர் அணி கருப்பண்ணன், நகர மாணவரணி துணை அமைப்பாளர் பெருமாள்துரை, சங்கரன், மஸ்தான், சுப்பு, சேகனா, அப்துல்வகாப், விடிஎம் அலி, காளிமுத்து, மணிகண்டன், காங்கிரஸ் சமுத்திரம், மார்க்சிஸ்ட் முத்துப்பாண்டி, கணபதி, வேலுமயில், இந்திய  கம்யூ. ராஜசேகர்,  திமுக ஒன்றிய நிர்வாகிகள் சி.எம்.குமார், பூரணச்சந்திரன், பண்டாரசாமி, தோப்பையா, மாடசாமி, சுப்பிரமணியன், கருப்பசாமி, ஜெயசீலன், காலேப், மணிகண்டன், இன்பராஜ், ராஜ், தினேஷ், சுதாகர் உட்பட ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

Tags : Mohammad Abubakar ,Kadayanallur ,
× RELATED கடையநல்லூர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி கண்டக்டர் பலி