8 தொகுதிகளிலும் திமுக களம் இறங்கியது * கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகம் * 5 தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடி போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, மார்ச் 13: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுக நேரடியாக போட்டியிடுவதால், கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 19ம் தேதி வரை அவகாசம் உள்ளது.இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அதன்படி, திருவண்ணாமலை ெதாfதியில் முன்னாள் அமைச்சரும், தற்போதய எம்எல்ஏவுமான எ.வ.வேலுவும், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், தற்போதய எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டியும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், செங்கம் தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி, போளூர் தொகுதி எம்எல்ஏ கே.வி.சேகரன், வந்தவாசி தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் மீண்டும் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.மேலும், ஆரணி தொகுதியில் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன், செய்யாறு தொகுதியில் ஒன்றியக்குழு தலைவர் ஓ.ஜோதி, கலசபாக்கம் தொகுதியில் ஒன்றிய செயலாளர் பெ.சு.தி.சரவணன் ஆகியோர் புது முகங்களாக தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.திருவண்ணாமலை ெதாகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, தேர்தல் களத்தில் மிகப்பெரும் அனுபவம் வாய்ந்தவர். கடந்த 1984, 2001, 2006 தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த தொகுதி மறு சீரமைப்பில் மாற்றியமைக்கப்பட்டதால், கடந்த 2011, 2016 தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016 தேர்தலில் திருவண்ணாமலை ெதாகுதியில் 52 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, கடந்த 1989, 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, 2016 தேர்தலில் கீழ்ெபன்னாத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்போதுள்ள 5 திமுக எம்எல்ஏக்களும் அந்தந்த தொகுதிகளில் மீண்டும் களம் இறங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகள் திமுக எதிர்கட்சியாக இருந்தபோதும், தங்களுடைய தொகுதியின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பதிலும், மக்களின் நன்மதிப்ைப பெற்று அவர்களுடைய இன்ப, துன்பங்களில் பங்கேற்பதிலும் திமுக எம்எல்ஏக்கள் முன்னணியில் இருந்ததால், இந்த தேர்தலில் மீண்டும் அவர்களுக்கு கட்சி தலைமை வாய்ப்பு அளித்திருக்கிறது.

இந்நிலையில், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, செங்கம் ஆகிய தொகுதிகளில் திமுக- அதிமுக நேரடியாக மோதுகிறது. திருவண்ணாமலையில் திமுகவும், பாஜகவும் களம் இறங்கியுள்ளன. அதேபோல், கீழ்பென்னாத்தூர், வந்தவாசியில் திமுக- பாமக களம் இறங்கியிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன்முறையாக அனைத்து தொகுதிகளிலும் நேரடியாக திமுக போட்டியிடுவதால், அக்கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.

Related Stories:

>