×

விசி முடிவு மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகை சிவன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு

நாகை, மார்ச் 13: மகா சிவராத்திரியை முன்னிட்டு நாகையில் உள்ள 12 சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஆண்டுக்கு ஒரு முறை, ஒன்பது கோள்களும் ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் வரும் நாள் மகா சிவராத்திரி என்றும், சிவபெருமான் சிவலிங்கமாக காட்சியளித்த நாள் மகா சிவராத்திரி என்றும் குறிப்பிடப்படுகிறது. மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு மேற்கொண்டால் ஆண்டுதோறும் வழிபட்ட பலன் கிடைக்கும், உடலில் உள்ள குண்டலினி சக்தி தூண்டப்படும் என நம்பப்படுகிறது.அந்த வகையில் நாகையில் உள்ள காயாரோகணசுவாமி கோயில் மற்றும் அதை சுற்றியுள்ள 12 சிவன் கோயில்களையும் மகா சிவராத்திரி நாளில் வழிபட்டால் ஜோதிர்லிங்க தரிசனத்துக்கு இணையான பலன் கிடைக்கும் என குறிப்பிடப்படுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு நாகை காயாரோகணசுவாமி கோயில், அழகியநாதசுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரசுவாமி கோயில், நாகை காசி விஸ்வநாதர் கோயில், அமர நந்தீஸ்வரர் கோயில், மலையீஸ்வரன் கோயில், திகாயாரோகணசுவாமி கோயில், கட்டியப்பர் கோயில், நடுவதீஸ்வரர் கோயில், வீரபத்திரசுவாமி கோயில், அக்கரைகுளம் சொக்கநாதர் கோயில், நாகநாதசுவாமி கோயில் ஆகிய 12 சிவன் கோயில்களிலும் நேற்று இரவு முதல் அதிகாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : VC ,Naga Shiva temples ,Maha ,Shivaratri ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் தமிழ்...