வேட்புமனு தாக்கல் செய்ய சுயேச்சைகள் 6 பேர் மனு வாங்கி சென்றனர்

திருவையாறு,மார்ச் 13: திருவையாறு சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் திருவையாறு தாலுகா அலுவலகத்தில் வேட்பாளார்கள் 12-ம் தேதி முதல் வரும் 19-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளா, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நெடுஞ்செழியன் ஆகியோர் வேட்புமனு பெறுவதற்கு தயார் நிலையில் இருந்தனர். ஆனால் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் திருவையாறு தாலுகா அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தோ்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சியிலிருந்து 2 பேரும், சுயேட்சைகள் 6 பேரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு வாங்கி சென்றனர்.

Related Stories:

>