×

முதல்நாளில் 17 மனுக்கள் வாங்கினர் போலீஸ் பாதுகாப்பு மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் முதல் நாளில் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை 9 சட்டமன்ற தொகுதி தேர்தல் செலவின,பொதுப் பார்வையாளர்கள் திருச்சி வந்தனர்

திருச்சி, மார்ச்.13: சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் நேற்று வந்தனர்.தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, தேர்தல் ஆணையம் திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொது பார்வையாளர்களாக வெளி மாநிலங்களை சார்ந்த மூத்த இந்திய ஆட்சிப்பணியாளர்களையும், செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களையும் நியமனம் செய்துள்ளது.பொதுப்பார்வையாளர்களான மணப்பாறை, ரங்கம் தொகுதிகளுக்கான ராம் பிரதாப் சிங் ஜேடன் மணப்பாறை டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகையிலும், திருச்சி மேற்கு பார்வையாளர் கிரிஷ், திருச்சி கிழக்கு ராஜ்புத் ஆகியோர் மன்னார்புரம் சுற்றுலா மாளிகையில், திருவெறும்பூர் தொகுதி முகமத் தயாப் திருவெறும்பூர் பெல் விருந்தினர் மாளிகை, லால்குடி, மண்ணச்சநல்லூர் பார்வையாளர் கிருஷ்ணகுமார் மன்னார்புரம் சுற்றுலா மாளிகை, முசிறி, துறையூர் (தனி) சுரேந்திர ராம் துறையூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் தங்கி உள்ளனர்.

செலவினப் பார்வையாளர்களான மணப்பாறை, ரங்கம் சாரதி பெகரா மணப்பாறை டிஎன்பிஎல் விருந்தினர் மாளிகை, திருச்சி மேற்கு துர்கா லால் மீனா, திருச்சி கிழக்கு அப்பு ஜோசப் ஜோஸ் மன்னார்புரம் சுற்றுலா மாளிகை, திருவெறும்பூர், லால்குடி அஜய் குமார் அரோரா பெல் விருந்தினர் மாளிகை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) தொகுதிக்கான பார்வையாளர் லக்ஷய் குமார் மன்னார்புரம் சுற்றுலா மாளிகையிலும் தங்கி உள்ளனர்.திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒன்றிணைத்து காவல் துறை பார்வையாளராக முக்விந்தர் சிங் சின்னா (எண்: 9592912025) நியமிக்கப்பட்டுள்ளார்.எனவே, பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், தேர்தல் பணிகள் தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் பார்வையாளர்களின் முகாம் அலுவலகத்தில் நேரடியாகவும், செல்போன் மூலமும் புகார் தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவராசு தெரிவித்தார்.

Tags :
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு