அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைக்க மறுப்பதா? ஆர்டிஓ அலுவலகத்தை பாஜ முற்றுகை கோவில்பட்டியில் பரபரப்பு

கோவில்பட்டி, மார்ச் 12: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க மறுத்த  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை பாஜவினர் முற்றுகையிட்டனர். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. இருப்பினும் இக்கூட்டத்தில் பங்கேற்க பாஜவுக்கு அழைப்பு மற்றும் தகவல் தெரிவிக்கவில்லையாம். இதனால் ஆவேசமடைந்த கட்சியினர் கோட்டாட்சியரை கண்டித்து, அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.  பாஜ பட்டியல் அணி மாநில செயலாளர் சிவந்தி நாராயணன் தலைமை வகித்தார். சட்டமன்ற பொறுப்பாளர் ஆத்திராஜ், நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன், தெற்கு ஒன்றியத் தலைவர் மாரிமுத்து, நகர பொதுச்செயலாளர் முனியராஜ், நகர துணைத்தலைவர் செல்வராஜ், நகர செயலாளர்கள் அருணாச்சலம், அருண்குமார், நகர பொருளாளர் முருகன், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் குருதேவன், அமைப்புசாரா மாவட்ட துணை த்தலைவர் நல்லதம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories:

>