×

சிலம்ப போட்டி தூத்துக்குடி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி, மார்ச் 12: தேசிய அளவில் சிலம்ப போட்டியில் சாதனை படைத்த தூத்துக்குடி மாவட்ட மாணவ, மாணவிகளை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.  அகில இந்திய அளவில் 17வது சிலம்ப சாம்பியன் போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா,கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, தெலங்கானா, உத்தரபிரேதேசம் மற்றும் டெல்லி ஆகிய 9 மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் 720 பேர் பங்கேற்ற தமிழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200 பேர் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கோவில்பட்டியில் இருந்து  பங்கேற்ற மாணவ, மாணவிகளில் மினி சப் ஜூனியர் பிரிவில் 1ம் வகுப்பு மாணவி மானசா, கம்பு சண்டை பிரிவில் 3வது இடம் ெபற்றார். மேலும் இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3வது  இடம் பெற்றார். 1ம் வகுப்பு மாணவி ஆனந்தலட்சுமி  கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும், 4ம் வகுப்பு மாணவி ராதிகா ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3வது இடமும் பெற்றனர்.

 சப் ஜூனியர் பிரிவில் 7 ம் வகுப்பு மாணவி மகாநந்தினி ஒற்றை சுருள் வாள் வீச்சு பிரிவில் 2 வது இடமும், 11ம் வகுப்பு மாணவி வெற்றி கார்த்திகா இரட்டை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3வது இடமும், 11ம் வகுப்பு மாணவர் சரவணன் இரட்டை கம்பு வீச்சு பிரிவில் 3வது இடமும் வென்றனர். சீனியர் பிரிவில் கல்லூரி மாணவிகளான மகரஜோதி மான்கொம்பு வீச்சு பிரிவில் முதல் இடமும்,  கீர்த்தனா ஒற்றை வாள் வீச்சு பிரிவில் முதல் இடமும், காயத்ரி இரட்டை சுருள் வாள் வீச்சு பிரிவில் 3வது இடமும், அனிதா பிரின்ஸி குத்துவரிசை பிரிவில் முதல் இடமும், கம்பு சண்டை பிரிவில் 3வது இடமும் பெற்றனர். இவ்வாறு இவர்கள் மொத்தம் 3 தங்கம், 1 வெள்ளி, 8 வெண்கல பதக்கங்கள்  வென்றனர்.
 தேசிய அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை எஸ்பி. ஜெயக்குமார் பாராட்டினார். தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து, பயிற்சியாளர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Tags : SP Jayakumar ,
× RELATED 3 ஆண்டாக தலைமறைவாக இருந்த கொலைக்குற்றவாளி சிவகாசியில் கைது