×

தூத்துக்குடியில் ஜெ ஜெ டிரேடர்ஸ் அரிசிக்கடை திறப்பு

தூத்துக்குடி, மார்ச் 12: தூத்துக்குடியில் ஜெ.ஜெ.டிரேடர்ஸ் அரிசிக்கடை திறப்பு விழா நடந்தது. தூத்துக்குடி டூவிபுரம் 2வது தெருவில் ஜெ.ஜெ.டிரேடர்ஸ் அரிசி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடை புதியதாக திறக்கப்பட்டுள்ளது. இதை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர் ஜோசப் செங்குட்டுவன் திறந்துவைத்தார். மாரியம்மாள், ராதா ஆகியோர் விழாவில் குத்து விளக்கேற்றினர். முதல் விற்பனையை சுப்பையா பெற்றுக்கொண்டார்.இதில், பாஜ சிறுபான்மை அணி மாவட்டச் செயலாளரான வக்கீல் வாரியர், 30வது வட்ட அமமுக செயலாளர் காசிலிங்கம், பாரதா சிவசுப்பிரமணியன், வக்கீல் மணி, ஆறுமுகப்பெருமாள், அகமதுஜான், ஷேக்உமர், கணேசன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags : JJ Traders ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...