×

நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில்v 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நெல்லை, மார்ச் 12: அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் நாங்குநேரி தொகுதிக்கு நெல்லை மாவட்ட  செயலாளர் தச்சை கணேசராஜாவும், பாளை தொகுதிக்கு ஜெ. பேரவை செயலாளர் ஜெரால்டும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் இருந்து நெல்லை திரும்பிய அவர்களுக்கு பாளை நீதிமன்றம் அருகே பாளை வடக்கு பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி தலைமையில் கட்சியினர் வரவேற்பளித்தனர். இதில் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் வேல்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம், சிவா, அரசு வக்கீல் சிவலிங்கமுத்து,  மாணவரணி புஷ்பராஜ் ஜெய்சன், வக்கீல் ஜோதிமுருகன், தலைமை பேச்சாளர் காவியன், வட்ட செயலாளர்கள் விவேகானந்தபாண்டியன், தனபால், எடிசன், பாண்டி, ஆபெல், டொமினிக், இளைஞர் பாசறை முருகேஷ், அப்ரின் பீர்முகம்மது உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர் கட்சி அலுவலகத்தில் தச்சை கணேசராஜா அளித்த பேட்டி: எங்களை வேட்பாளர்களாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தமிழக மக்களுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை அதிமுக அரசு அள்ளித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை கொண்டாட ரூ.2500 வழங்கியது. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களும் டாக்டராக 7.5 சதவீத இடஒதுக்கீடு அறிவித்தது. கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட நல்ல திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீர் தட்டுப்பாடு இல்லாத ஆட்சியை அதிமுக அளித்துள்ளது. எனவே இந்த ஆட்சிக்கு மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் நான் 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வாழை விவசாயிகளை வாழ்விக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விஜயநாராயணபுரம் பெரியகுளத்தில் கூடுதலாக தண்ணீர் தேக்க அணை கட்டுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் சீவலப்பேரி துர்க்கையம்மன் கோயிலில் பிரசாரத்தை தொடங்க உள்ளேன்’’ என்றார். பின்னர் நடந்த ஆலோசனை கூட்டத்தில், பகுதி செயலாளர்கள் சண்முககுமார், ஜெனி, சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், சிந்துமுருகன், பாளை ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டிபாண்டியன், ராமசுப்பிரமணியன், விஜயகுமார், லட்சுமிகாந்தன், சேகர், மாநில பேச்சாளர் சேகர், செல்வராஜ், மணி, இளைஞரணி கணேசபெருமாள், தங்கபிச்சையா, தளவாய், நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Nanguneri Assembly ,
× RELATED ரூபி மனோகரன் எம்எல்ஏ தலைமையில்...