பணியின் போது இறந்த பனியன் தொழிலாளியின் குடும்பத்திற்கு உதவித்தொகை

திருப்பூர், மார்ச் 12: திருப்பூர் ஜே.பி.நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கட்டிங் மாஸ்டர். கடந்த 2018 ஆகஸ்ட் 10ம் ேததி பணியில் இருந்த போது, சுப்பிரமணியன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இ.எஸ்.ஐ. நிறுவனம் அவரது இறப்பை பணியின் போது ஏற்பட்ட விபத்தாக அங்கீகரித்தது. இதற்கிடையே கோவை இ.எஸ்.ஐ. சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு) அவரது குடும்பத்திற்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க உத்தரவிட்டார். அதன்பேரில் இ.எஸ்.ஐ. கிளை மேலாளர் மனீஷ் தாக்கர், சுப்பிரமணியனின் குடும்பத்தினரிடம் உதவித்தொகையாக ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 744 வழங்கினார். மேலும், நாள் ஒன்றுக்கு ரூ.342 வீதம் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கிற்கு வரவும் வைக்கப்படும்.  

நிகழ்ச்சியில் காசாளர் நாகமணிகுமார், மேல் பிரிவு எழுத்தர் பாலமுருகன், அலுவலக உதவியாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

More