×

வெளிமாநிலங்களில் இருந்து மாவட்டத்திற்குள் வருபவர்களை கண்காணிக்க 13 குழுக்கள் அமைப்பு

திருப்பூர்,மார்ச்12: வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் வருபவர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை சார்பில் 13 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், கடந்த காலத்தை விட தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனாலும், தொழில் நகரமான திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால், திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களை கண்காணிக்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்திற்கு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகிறவர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 13 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் வெளியில் இருந்து வந்தவர்களை கண்காணித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வைக்க வேண்டும். மேலும், 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்பது உள்பட பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களும் தங்களது வீடு அருகே வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து யாரேனும் வந்திருந்தால், அருகில் உள்ள சுகாதாரத்துறை அலுவலகம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு