3 தொகுதிகளுக்கு செலவின பார்வையாளர்கள் நியமனம்

ஊட்டி, மார்ச் 12: நீலகிரியில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு செலவினம் மற்றும் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் இன்று (12ம் தேதி) முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கான செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு செலவின பார்வையாளராக விஷால் எம் சனப் நியமிக்கப்பட்டுள்ளார். குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான செலவின பார்வையாளராக அமர் சிங் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் வேட்பு மனுதாக்கல் துவங்குவதற்கு முன்பாக நீலகிரிக்கு வர உள்ளனர்.இதேபோல், நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளுக்கும் பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு பெனுதர் பகேரா, கூடலூர் தொகுதிக்கு ராகுல் திவாரி, குன்னூர் தொகுதிக்கு சௌரவ் பஹாரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தான் நடைபெற வேண்டும் என்பதால் வரும் 18ம் தேதி நீலகிரிக்கு வர உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>