×

சிறப்பாசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஈரோடு, மார்ச் 12:  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் சிறப்பு ஆசிரியர்களுக்கான (கைவினை பயிற்றுவிப்பாளர், தையல் ஆசிரியர், இசை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்) தேர்வு நடக்க உள்ளது. மொத்தம், 1,598க்கும் மேற்பட்ட பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 74 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறப்பு ஆசிரியர் பணியிடத்துக்கு கல்வி தகுதி, 10ம் வகுப்பும், அதன் பின் உயர் கல்வி இரண்டு ஆண்டு படித்திருக்க வேண்டும். மேலும், டிப்ளமோ படிப்பில் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் அடுத்த மாதம் 25ம் தேதிக்குள் https://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் கூடுதல் விபரங்களுக்கு ஈரோடு ஜவான்ஸ் பவனில் உள்ள முன்னாள் படைவீரர்கள் நல துணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி