ஈரோடு - பெருந்துறை ரோட்டில் லோட்டஸ் ஹூண்டாய் புதிய ஷோரூம் திறப்பு விழா

ஈரோடு, மார்ச் 12: ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம் பாளையத்தில் லோட்டஸ் ஹூண்டாய் புதிய ஷோரூம் திறப்பு விழா நடந்தது. லோட்டஸ், டெக்ஸ்வேலி குழுமங்களின் தலைவர் பெரியசாமி, மேனேஜிங் டைரக்டர் ராஜசேகர், செயல் இயக்குனர் மற்றும் லோட்டஸ், ஹூண்டாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குமார் ஆகியோர் வரவேற்றனர். புதிய ஷோரூமை டாக்டர் ராமகிருஷ்ணன் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஹூண்டாய் அஸ்டா ஆப்ஷன் புதிய மாடல் கார்  முதல் விற்பனையை டெக்ஸ்வேலி துணைத் தலைவர் தேவராஜன் தொடங்கி வைக்க அதை கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இதேபோல் ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களை சிறப்பு அழைப்பாளர்கள் செந்தில்குமார், டாக்டர். அபுல் ஹசன், மோகன சுந்தரம், ரவி, சின்னசாமி, ராமகிருஷ்ணன், செந்தில் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஈரோட்டில் லோட்டஸ் ஹூண்டாய் 2019ம் ஆண்டு தொடங்கி ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து பல விருதுகளை பெற்றுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டிற்கான அதிக கார் விற்பனைக்கான தென்னிந்தியாவின் நம்பர் 1 டீலர்க்கான விருதையும் பெற்றுள்ளது.

Related Stories:

>