சாமி கும்பிட ெசன்ற வங்கி ஊழியர் பலி

திருவாடானை, மார்ச் 12: திருவாடானை அருகே உள்ள கடம்பகுடி கிராமத்தை சேர்ந்தகுமார் (32). இவர் தனியார் வங்கி ஒன்றில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று சிவராத்திரியை முன்னிட்டு தனது சொந்த ஊரான கடம்பகுடி கண்மாய் உள்பகுதியில் உள்ள ஐயனார் கோயிலுக்கு சாமி கும்பிட செல்வதற்காக தண்ணீரில் நீந்தி சென்றுள்ளார்.அப்போது எதிர்பாராதவிதமாக கண்மாயில் படர்ந்து கிடந்த தாமரை செடியில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் வந்துகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து திருவாடானை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>