மதுரை மாவட்ட தேர்தலை கண்காணிக்க 6 பொதுப் பார்வையாளர்கள் நியமனம்

மதுரை, மார்ச் 12: மதுரை மாவட்ட தேர்தலை கண்காணிக்க  6 பொதுப்பார்வையாளர்கள், 2 போலீஸ் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.  மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில், 2 தொகுதிக்கு ஒரு பொதுப்பார்வையாளராக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், மதுரை மத்தி, மதுரை தெற்கு தொகுதிகளுக்கு தலா ஒரு பார்வையாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி என மொத்தம் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மேலூர், மதுரை கிழக்கு ஆகிய தொகுதிகளுக்கு யுகாய் கிஷோர் பண்ட், சோழவந்தான், மதுரை வடக்கு ஆகிய  தொகுதிகளுக்கு ஜோதி யாதவ், மதுரை மேற்கு,  திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு டாக்டர் சஞ்சய் சின்கா, திருமங்கலம்,  உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளுக்கு ராம் கிவால், மதுரை தெற்கு தொகுதிக்கு டாக்டர் பிரதீபா சிங்,  மதுரை மத்திய தொகுதிக்கு ஸ்ரீகாந்த் மிஸ்ரா ஆகியோர் பொதுப்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல ஐந்து தொகுதிக்கு ஒருவர் வீதம் 2 போலீஸ் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை  வடக்கு, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு ஐபிஎஸ் அதிகாரி தரம்வீர், மதுரை  மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய  தொகுதிகளுக்கு ரூபினி ஷர்மா ஆகியோர் போலீஸ் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>