×

குஜிலியம்பாறையில் 6 மாதமாக கிடப்பில் கிடக்கும் கழிவுநீர் வாய்க்கால் பணி ஓட்டு கேட்க எம்எல்ஏ வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என ஆவேசம்

குஜிலியம்பாறை, மார்ச் 12: குஜிலியம்பாறையில் வாய்க்கால் மைக்கும் பணி கடந்த 6 மாதமாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஓட்டு கேட்க வரும் அதிமுக எம்எல்ஏ பரமசிவத்திற்கு எதிப்பு தெரிவிப்போம் என அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்துள்ளனர். குஜிலியம்பாறை காளியம்மன் கோவில் எதிரே 50க்கும் மேற்பட்ட குடியிப்புகள் உள்ளது. இங்கிருந்து இருந்து வெளியேறும் கழிவுநீர் முறையாக செல்வதற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு வாய்க்கால் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டது. பாதி தூரம் வரை வாய்க்கால் கட்டப்பட்ட நிலையில், மீதி பாதி தூரம் வாய்க்கால் கட்டும் பணியை நிறுத்தி விட்டனர். கடந்த 6 மாதம் ஆகியும், இன்னும் பாதி தூரம் வாய்க்கால் அமைக்கும் பணி துவங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் அங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுவதும் பாதியில் கட்டப்பட்ட வாய்க்காலில் தேங்கியவாறு கிடக்கிறது. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும அபாயம் நிலவுகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட சிட்டிங் எம்எல்ஏ பரமசிவத்திற்கே மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு ஓட்டு கேட்க வரும் சிட்டிங் எம்எல்ஏ பரமசிவத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என இப்பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.

Tags : MLA ,Kujiliampara ,
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்