×

கொடைக்கானல் கூட்டுறவு வங்கிகளில் நகைகளை திருப்ப முடியாமல் அலைக்கழிப்பு தள்ளுபடி இருக்கா? இல்லையா?

கொடைக்கானல், மார்ச் 12: தமிழக அரசின் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 6 பவுன் வரை நகைக்கடன், விவசாய கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருந்தார். இதையடுத்து நகை, விவசாய கடன் தள்ளுபடி செய்தது குறித்து பொதுமக்கள், விவசாயிகள் வங்கிகளுக்கு சென்று கேட்டனர். அப்போது அரசாணை வங்கிகளுக்கு வந்தால் மட்டுமே நகை, விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கொடைக்கானல் பகுதி மக்கள் கூறுகையில், ‘கொடைக்கானலில் அரசு உத்தரவுப்படி அடகு வைத்த நகைகளை மீட்பதற்கு சென்றால் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தங்களுக்கு உரிய உத்தரவு வரவில்லை, எனவே வட்டியும், முதலும் நீங்கள் கட்டினால்தான் நகைகளை மீட்க முடியும் என கறரராக பேசி வருகின்றனர். இதனால் நாங்கள் தேவையில்லாமல் அலைக்கழிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே தமிழக அரசு நகை, விவசாய கடன் தள்ளுபடி இருக்கா, இல்லையா என்ற குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kodaikanal Co ,
× RELATED முகநூலில் சர்ச்சை கருத்து கொடைக்கானல் கூட்டுறவு வங்கியின் தலைவர் கைது