பட்டிவீரன்பட்டி காமாட்சியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

பட்டிவீரன்பட்டி, மார்ச் 12: பட்டிவீரன்பட்டி மருதாநதி கரையில் அமைந்தள்ளது காமாட்சியம்மன் கோயில். இங்கு கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் வாஸ்து பூஜை, திருமகள் வழிபாடு, காப்பு அணிவித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று 2ம் கால வழிபாடு, பேரொளி வழிபாடும் நடந்தது. பின்னர் திருக்குடம் புறப்பாட்டை தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காமாட்சியம்மன் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Related Stories:

>