ேவலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1,153 போலீசாருக்கு தடுப்பூசி

வேலூர், மார்ச் 12:வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1,153 போலீசாருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு துறை, காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடவேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அரசு ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள் என உயரதிகாரிகள் முதல் கீழ்நிலை அதிகாரிகள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 1,900 போலீசாரில் நேற்று வரை 1,153 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.

மீதமுள்ளவர்களில் மருத்துவ விடுப்பில் போலீசார் மற்றும் மகவேறுகால விடுப்பில் பெண் காவலர்கள், அயல்பணிக்கு சென்றவர்கள் இணை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசியை வெளியே கூட போட்டு கொண்டு இருக்கலாம். அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதனால் பெரும்பாலான போலீசார் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>