வேலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களுக்கு செல்போனில் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்

வேலூர், மார்ச், 12: வேலூர் மாவட்டத்தில் தேர்தல் செலவின தொடர்பான புகார்களை தெரிவிக்க 2 தேர்தல் செலவின பார்வையாளரகளின் செல்போன் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை தடுக்க சட்டமன்ற தொகுதி வாரியாக 24 மணிநேரமும் கண்காணிக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், செலவின பார்வையாளர்கள் குழு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு தேர்தல் செலவின பார்வையாளர்களை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டத்திற்கு 2 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை வேலூருக்கு வர உள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, கே.வி.குப்பம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் செலவின பார்வையாளராக அமித்கடாம் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் தேர்தல் செலவினங்கள் தொடர்பாக, ‘9498747538’ என்ற எண்ணிலும், ‘askamit87@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம். இதேபோல் வேலூர், குடியாத்தம் (தனி) தொகுதிகளுக்கு தீபக் ஆர் லட்சுமிபதி தேர்தல் செலவின பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் தேர்தல் தொடர்பான புகார்களை ‘9498747539’ என்ற எண்ணிலும், ‘deepakrl.irs@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>