×

உறவினர்கள் சாலைமறியல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் குளித்தலை, அய்யர்மலை சிவன் கோயில்களில் சிவராத்திரி விழா

குளித்தலை, மார்ச் 12: குளித்தலை அய்யர்மலை சிவாயம் கோயில்களில் மகா சிவராத்திரி விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோயில், அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில், சிவசிவ புரீஸ்வரர் கோயில் மற்றும் அனைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரியை ஒட்டி இரவு முழுவதும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் விரதமிருந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயில்களில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளில் இரவு முழுவதும் அணையாமல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. மேலும் ஆங்காங்கே அன்னதானங்கள் வழங்கப்பட்டது. பக்தர்கள் இரவு முழுவதும் கோயில்களில் இருப்பதால் இன்னிசை கச்சேரி மற்றும் தேனுகா நூல்களை பள்ளியில் மாணவர்களின் இசை நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாய்ப்பாட்டு வீணை பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.எந்த அடிப்படையில் டி கிரேடு அங்கீகாரம்?எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத குளித்தலை பேருந்து நிலையத்திற்கு எந்த அடிப்படையில் டி கிரேடு பேருந்து நிலையம் என அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என தெரியவிலலை.கடைகளுக்கு தனி இடம் ஒதுக்க வேண்டும்ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளித்தலை பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம், காய்கறிக்கடை, ஆட்டோக்கள், கார்கள், வேன்கள், அனைத்து நிறுத்தும் இடமும் இங்கு தான் உள்ளது. இதனால் பேருந்துகள் நிறுத்துவதற்கு இடமே இல்லை. ஆட்டோகளுக்கும், கார்களுக்கும், இரு சக்கர வாகனங்களுக்கும், காய் கடைகளுக்கும், குளித்தலை நகராட்சி நிர்வாகம் ஒரு நிரந்தர இடத்தை தேர்வு செய்து அவர்களுக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும்.

Tags : Shivaratri festival ,Ayyarmalai Shiva temples ,
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலம்