மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை, மார்ச் 12: மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெரு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங் கேற்றனர்.மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவில் பழமைவாய்ந்த முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த 10ம் தேதி முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று காலை யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்ேகற்றனர்.

Related Stories:

More