×

சர்க்கசுக்கு தடை எதிரொலி டைல்ஸ் ஒட்டும் பணி செய்த கொல்கத்தா வாலிபர் திடீர் சாவு

ஜெயங்கொண்டம், மார்ச்12: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் தனியார் சர்க்கஸ் கம்பெனி ஒன்று கடந்த 2020 மார்ச் மாதம் துவங்கி ஒரு வாரம் நடைபெற்றது. உடனடியாக கொரோனா தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஓராண்டாக இயங்கவில்லை. அதில் வேலைக்காக வந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர். மீதமிருந்தவர்கள் கிராமங்களுக்கு சென்று கொத்தனார், சித்தாள் வேலை பார்த்து பிழைப்பு நடத்தினர். போக்குவரத்து துவங்கி நடந்து வரும் நிலையில் ரயில், பஸ் போக்குவரத்து நடைபெற்றும், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் வைபவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், எங்களது சர்க்கஸ் மட்டும் இயங்க அனுமதி இதுவரை கொடுக்கவில்லை என தொழிலாளர்கள் புலம்பி வந்தனர்.

இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த கபீர்(24) என்ற வாலிபர் ஒருவர் சர்க்கஸ் கம்பெனி மேஸ்திரி தர்வேந்தர் மூலமாக சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து இருந்தார். சர்க்கஸ் நடைபெறாததால் கூலி வேலைக்கு சென்று வந்தார். நேற்று மதியம் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு ஜெயங்கொண்டம் அண்ணா நகருக்கு சென்று வேலை செய்துகொண்டு இருந்தார். அப்போது தனக்கு மயக்கமாக வருவதாகவும் கூறியுள்ளார். அருகில் இருந்தவர்கள் அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளனர். மயக்கமடைந்து சுவற்றில் சாய்ந்தவாறு உட்கார்ந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : circus ban ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...