41 அணிகள் பங்கேற்றது புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கும் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம் விதிமுறைகளை கடைபிடிக்க வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, மார்ச் 12: புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில் தமிழகத்தில் வேட்பு மனுதாக்கல் இன்று (12ம் தேதி) தொடங்குகிறது.அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, விராலிமலை, திருமயம், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை (தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், அறந்தாங்கி தொகுதிக்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்திலும், விராலிமலை தொகுதிக்கு இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.மேலும் திருமயம், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு அந்தந்த தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>