கி.வீரமணி பங்கேற்பு திருவையாறு தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

திருவையாறு,மார்ச் 12: திருவையாறு தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலருமான மஞ்சுளா தலைமை வகித்து வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலா–்கள் தோ்தல் நடைபெறும் முதல் நாள் என்ன பணிகள் செய்ய வேண்டும், தோ்தல் நாள் அன்று என்ன பணிகள் செய்யவேண்டும், தோ்தல் முடிந்தபிறகு மாலையில் என்ன பணிகள் செய்யவேண்டும் என்பதை பற்றி விளக்கமாக பயிற்சி அளித்தார். இதில் உதவி தேர்தல் அலுவலரும், தாசில்தாருமான நெடுஞ்செழியன், தோ்தல் துணை தாசில்தார்கள் விவேகானந்தன், திரிபுரசுந்தரி மற்றும் வாக்குச்சாவடி மண்டல அலுவலா–்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More