×

கும்பகோணத்தில் நாளை திக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம்

கும்பகோணம், மார்ச் 12: கும்பகோணம் கடலங்குடி பகுதியில் நாளை (13ம் தேதி) திராவிட கழக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .
கும்பகோணம் கடலங்குடி தெரு பகுதியில் திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் குடந்தை கழக மாவட்டத்தலைவர் நிம்மதி தலைமையில் நடைபெறுகிறது. மாவட்ட செயலாளர் தங்கராசு அனைவரையும் வரவேற்கிறார். திராவிடர் கழக காப்பாளர் தங்கராசு, மண்டல தலைவர் அய்யனார், மாவட்ட தலைவர் அமர்சிங் உள்ளிட்ட பலரும் முன்னிலை வகிக்கின்றனர். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார். கூட்டத்தில்- நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திராவிட கழக நிலைப்பாடு மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. குடந்தை பெரு நகர செயலாளர் ரமேஷ் நன்றி கூறுகிறார்.

Tags : General Committee ,Kumbakonam ,
× RELATED புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை...