×

வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் கும்பகோணம் தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சி

கும்பகோணம், மார்ச் 12: கும்பகோணம் சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாற்று கட்சிக்கு தேர்தல் பணியாற்ற அதிமுகவினர் முடிவு செய்துள்ளனர்.கோயில் நகரமான கும்பகோணம் தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் கோசி. மணி நான்கு முறை வெற்றி பெற்றதுடன் தொடர்ந்து 15 ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மேலும் 1977ம் ஆண்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்ஆர். ராதா எம்ஜிஆர் அமைச்சரவையில் கைத்தறி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். நகராட்சியில் 45 வார்டுகள் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள் திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 2 ஊராட்சிகள் சோழபுரம், தாராசுரம், திருநாகேஸ்வரம் பேரூராட்சிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.

1996ம் ஆண்டு முதல் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. எனவே இந்த முறையும் இத்தொகுதியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு முதல் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வரும் சாக்கோட்டை அன்பழகனுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் அவரது ஆதரவாளர்கள் உள்ளனர். அதிமுகவை பொறுத்தவரை 1991ம் ஆண்டில் வெற்றி பெற்ற பிறகு தொடர்ந்து இத்தொகுதியில் தோல்விடைந்து வருகிறது. ஏற்கனவே இத்தொகுதியில் அதிமுக சார்பில் 5 முறை போட்டியிட்ட ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் என்ஆர்விஎஸ். செந்தில், அறிவழகன் உட்பட பலர் விருப்ப மனு அளித்து காத்திருந்தனர். மேலும் இத்தொகுதியை பெற பாமகவும் முயற்சி செய்து வந்ததது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்குகும்பகோணம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதே வேளையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு பிரபல 2 தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில் அத்தொகுதி மூவேந்தர் முன்னேற்ற கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பாஜகவினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் அதிக அளவில் ஆர்வம் காட்டி விருப்பமனு செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனால் தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு வேலை செய்வதைவிட மாற்றுகட்சி வேட்பாளருக்கு பணியாற்ற அதிமுகவினர் தயாராக உள்ளனர் என்று கட்சியினர் தெரிவித்தனர்.

Tags : AIADMK ,Kumbakonam ,Coalition Party ,
× RELATED வேளாண் சட்டத்துக்கு ஆதரவு அதிமுக வேட்பாளரை விவசாயிகள் முற்றுகை