×

விம்பிள்டன் டென்னிஸ்: காலிறுதியில் பெகுலா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர்ர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, அமெரிக்க நட்சத்திரம் ஜெஸ்ஸிகா பெகுலா தகுதி பெற்றார். 4வது சுற்றில் சக வீராங்கனை இவா ஜோவிச்சுடன் (18 வயது) மோதிய பெகுலா (32 வயது) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக்கொண்டு அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி இவா ஜோவிச்சை திணறடித்த அவர் 6-3, 6-1 என்ற கணக்கில் அடுத்த 2 செட்களையும் எளிதாகக் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.

இப்போட்டி 2 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் இகா ஸ்வியாடெக் (போலந்து), அமண்டா அனிசிமோவா (அமெரிக்கா), எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), மரியா சாக்கரி (கிரீஸ்) ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), அலெக்சாண்டர் புப்லிக் (கஜகஸ்தான்), பிளாவியோ கபால்லி (இத்தாலி), டெய்லர் பிரிட்ஸ்ஸ் (அமெரிக்கா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.) ஆகியோர் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Wimbledon Tennis ,Begula ,London ,Wimbledon Grand Slam tennis series ,Jessica Pegula ,Pegula ,Iva Jovic ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...