அன்னுக்குடி குளத்தின் கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்

பாபநாசம், மார்ச் 12: கும்பகோணம்-ஆவூர் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் கோபுராஜபுரம், அன்னுக்குடி, உத்தமதானபுரம், சாலபோகம், மணக்கோடு உள்ளிட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த சாலையில் பாபநாசம் அடுத்த அன்னுக்குடி செல்லும் வழியில் மெயின் சாலையில் சாலையையொட்டி அன்னுக்குடி குளம் உள்ளது. பரந்த குளத்தின் கரையில் சாலையை ஒட்டி தடுப்பு இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் விபத்து நேரும் அபாயமுள்ளது. எனவே இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி அன்னுக்குடி குளத்தின் கரையில் தடுப்பு அமைத்திட வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>