×

100 மீட்டர் தூரத்தில் கோடு போடும் பணி முசிறி சப்கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினருடன் தேர்தல் ஆலோசனை கூட்டம்

முசிறி,மார்ச்.12:முசிறி சப்.கலெக்டர் அலுவலகத்தில் சப் கலெக்டர் ஜோதி சர்மா தலைமையில் அனைத்து கட்சியினருடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.தேர்தல் துணை அலுவலர்கள் சந்திர தேவநாதன், சாந்தகுமார் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரகுமார், தேர்தல் துணை தாசில்தார் சரவணன்,தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வேட்புமனு தாக்கல் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறும். அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இரண்டு பேருடன் மட்டுமே வரவேண்டும்.

இரண்டு வாகனங்கள் மட்டும் வேட்பாளருடன் அனுமதிக்கப்படும். அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்கு முன்பே வாகனங்கள், பேரணி நிறுத்தப்படும். கோவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து வேட்புமனு தாக்கல் செய்ய வரவேண்டும். 20ம் தேதி வேட்புமனு பரிசீலனை,22ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற இறுதி நாள் .என தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வரையறுத்துள்ளது.தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் தேர்தல் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Musiri Sub-Collector ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி