×

சீன ராணுவத்தில் 2 புதிய ஜெனரல்கள் நியமனம்

பெய்ஜிங்: சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர் ஜீ ஜின்பிங் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார். பல உயரதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்படவுள்ள மறுசீரமைப்பின் முன்னோடியாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது. இந்நிலையில் ஜாங் ஷகுவாங் மற்றும் விமானப்படை தளபதி வாங் கேங் ஆகியோருக்கு ஜெனரல் பதவி உயர்வுக்கான ஆணைகளை அதிபர் ஜீ ஜின்பிங் வழங்கினார். மத்திய ராணுவ ஆணையத்தில் ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பிரிவின் தலைவராகவும் ஜாங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : China ,Beijing ,Communist Party ,Xi Jinping ,Zhang Shaguang ,
× RELATED காவலில் வைக்கப்பட்ட ஆங் சாங் சூகி...