எஸ்ஐயை மாற்ற எதிர்ப்பு கமிஷனர் ஆபீசில் மனு

சேலம், மார்ச் 11: சேலம் சூரமங்கலம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் பாரதிராஜா. இவர் அன்னதானப்பட்டிக்கு மாற்றப்பட்டார். இதற்கு சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில், எஸ்ஐ பாரதிராஜா சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை எங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவரது மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>