- வடமாடு மஞ்சுவிரட்டு
- முதுகுளத்தூர்
- சாயல்குடி
- காத்தக்குளம் செம்பு
- கூத்த அய்யனார்
- காளியம்மன் கோயில்
- அனி மத்த பொங்கல்
- புரவி தேவ்பு திருவிழா
- ராமநாதபுரம்
- புதுக்கோட்டை
- திருச்சி
- சிவகங்கை...
சாயல்குடி, ஜூலை 3: முதுகுளத்தூர் அருகே உள்ள காத்தாகுளம் செம்பு கூத்த அய்யனார், காளியம்மன் கோவில் ஆனி மாத பொங்கல் மற்றும் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
களத்தில் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைகளுக்கும் 20 நிமிடம் நேரம் ஒதுக்கப்பட்டது. சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்கியது. சீறிப் பாய்ந்த பல முரட்டுக் காளைகள் வீரர்களுக்கு சவால் விட்டு பிடிபடவில்லை. இதில் பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பணம், குத்து விளக்கு, சேர் ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.
