×

பள்ளி, கல்லூரி நேரங்களில் பஸ்ஸில் மாணவர்கள் ஆபத்தான பயணம்

 

காரைக்குடி, ஜூலை 3: காரைக்குடி பகுதி மாவட்டத்தில் கல்வி நகராக இருந்து வருகிறது. இங்குள்ள கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம், உடற்கல்வியியல் கல்லூரி, பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரி, மாதிரி பள்ளி, அரசு கலைக்கல்லூரி, மத்திய மின்வேதியியல் ஆய்வகம், அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தனியார் மெட்ரிக் கல்லூரி, பெண்கள் கலைக்கல்லூரி என பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் உள்ளன. இந்த கல்வி நிறுவனங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பெரும்பாலும் காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை உள்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்களே அதிகளவில் படிக்கின்றனர்.

பல்வேறு ஊர்களில் இருந்து வரும் மாணவர்கள் புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்டில் இறங்கி அங்கிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். காலையில் பள்ளி, கல்லூரி துவங்கும் மற்றும் மாலை முடியும் நேரத்தில் மாணவர்கள் வந்து செல்ல வசதியாக போதுமான பஸ் இயக்கப்படுவது இல்லை. இதனால் பஸ் படியில் தொங்கிய படிதான் மாணவர்கள் பயணம் செய்கின்றனர். பள்ளி, கல்லூரி நேரங்களில் மட்டுமாவது கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தும் பயனற்ற நிலையே உள்ளது. இது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் வசதிக்காக எந்த ஒரு திட்டமும் செயல்படுத்த வில்லை.

பள்ளி, கல்லூரி துவங்கும் நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் மாணவர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால் வழக்கமாக இயக்கும் பஸ்களைதான் இயக்கி வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி படியில் பயணம் செய்கிறோம். பெரும்பாலான மாணவர்கள் கூட்டத்துக்கு பயந்து சுமார் 5 கிலோ மீட்டர் நடந்தே செல்கின்றனர். இதனால் உரிய நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. படியில் பயணம் செய்வதால் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அரசு பொறுப்பேற்றுகுமா என தெரியவில்லை. எங்களின் நிலை அதிகாரிகளுக்கு தெரிந்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

 

Tags : Karaikudi ,Alagappa University ,Physical Education College ,University College of Education ,Model School ,Government Arts College ,Central Electrochemical Laboratory ,Government Engineering… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...